ரஷ்யப் படைகளின் தாக்குதலால் ஏறத்தாழ ஆயிரத்து 300 உக்ரைன் வீரர்கள் கொல்லப்பட்டதாக அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய ஜெலன்ஸ்கி, உக்ரைனில் நடக்கும் ஆக்கிரமிப்புகள் நாளை ஐரோப்பிய நாடுகளிலும் நடக்கக் கூடும் என்றும் அதை தடுக்க மற்ற நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராக போராட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
போரை முடிவுக்கு கொண்டு வரும் பேச்சுவார்த்தையில் ஐரோப்பிய நாடுகள் அதிகம் ஈடுபட வேண்டுமென கேட்டுக் கொண்டார். உக்ரைன் – ரஷ்யா இடையில் மத்தியஸ்தம் செய்ய இஸ்ரேல் பிரதமர் நப்தாலி பென்னட் எடுக்கும் முயற்சிகளை வரவேற்பதாக ஜெலன்ஸ்கி கூறினார்.
போர் நிறுத்தம் குறித்த சமாதான பேச்சுவார்த்தையை ஜெருசலேமில் நடத்த பிரதமர் நப்தாலி பென்னட்டை வலியுறுத்தியதாக ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.