உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியை ஆதரித்து சிறப்பு பட்டமளிக்க பிரதமர் போரிஸ் ஜோன்சனிடம் பிரித்தானிய எம்.பிக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
முன்னாள் நகைச்சுவை நடிகரும் அரசியல்வாதியுமான ஜெலென்ஸ்கி தனது தாய்நாட்டை ஆக்கிரமிக்கும் ரஷ்யப் படைகளை எதிர்கொள்ளும் உறுதிக்காக ஆதரவாளர்களின் பட்டாளத்தை வென்று வருகிறார்.
இந்த நிலையில்தான் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியை ஆதரித்து மாவீரர் பட்டமளிக்க வேண்டும் என பிரித்தானிய எம்.பிக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
ரஷ்ய துருப்புகளின் நெருக்கடியை அடுத்து, உக்ரைனில் இருந்து பத்திரமாக வெளியேற்ற முன்னெடுக்கப்பட்ட முயற்சிகளுக்கு மறுப்பு தெரிவித்த ஜெலென்ஸ்கி, தம்மை பாதுகாப்பதைவிட தமது துருப்புகளுக்கு ஆயுதம் வழங்குங்கள் அவர்கள் எங்களை பாதுகாப்பார்கள் என துணிச்சலாக தெரிவித்திருந்தார்.
இக்கட்டான சூழலிலும் உக்ரைனுக்கு அவர் அளித்துவரும் ஊக்கத்திற்காக, இங்கிலாந்து குடிமகன் அல்லாத ஒருவருக்கு நாம் வழங்கக்கூடிய மிக உயர்ந்த மரியாதைக்கு அவர் முற்றிலும் தகுதியானவர் என எம்.பி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.