நடிகர்
தனுஷ்
நடிப்பை பற்றி நாம் சொல்லி ரசிகர்களுக்கு தெரியவேண்டிய அவசியமில்லை. நடிப்பிற்காக தன்னையே அர்ப்பணிக்கும் ஒரு நடிகர் தான் தனுஷ். படங்களில் தான் நடிக்கும் கதாபாத்திரமாகவே மாறக்கூடிய தனுஷிற்கு கிடைத்த அங்கீகாரம் தான் இரண்டு தேசிய விருதுகள் மற்றும் பாலிவுட் ஹாலிவுட் படவாய்ப்புகள்.
கமர்ஷியல் படமாக இருந்தாலும் சரி, வித்யாசமான கதைக்களம் உடைய படமாக இருந்தாலும் சரி தன் முத்திரையை பதிக்க தனுஷ் தவறியதில்லை. என்னதான் சில படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும் தனுஷின் நடிப்பு பாராட்டும்படியே இருக்கும்.
மறைந்த தன் ரசிகருக்காக ரஜினி செய்த காரியம்…குவியும் பாராட்டுக்கள்..!
அதற்கு பல உதாரணங்களும் உண்டு. மேலும் தனுஷ் நடிகராக மட்டுமில்லாமல் பாடகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகத்திறன் கொண்டவராகவும் விளங்கிவருகிறார்.
இந்நிலையில் தனுஷின் நடிப்பில் சமீபத்தில் வெளியான படங்கள் அவருக்கு எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை.
ஜகமே தந்திரம்,
அத்ராங்கி ரே
, மாறன் ஆகிய படங்கள் OTT யில் வெளியாகி சொதப்பின. தன் சொந்த வாழ்க்கையில் பல கஷ்டங்களை தற்போது அனுபவித்து வரும் தனுஷ் சினிமா வாழ்க்கையிலும் சற்று பின்னடைவை சந்திப்பது அவருக்கு மேலும் கஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
தனுஷ்
எனவே இப்படியே போனால் சரிப்பட்டு வராது என எண்ணிய தனுஷ் தன் ஆஸ்தான இயக்குனரான வெற்றிமாறனை நாடியுள்ளார். தனுஷ் மற்றும்
வெற்றிமாறன்
கூட்டணியில் வெளியான
ஆடுகளம்
,
பொல்லாதவன்
, அசுரன்,
வடசென்னை
ஆகிய படங்கள் தனுஷின் திரைவாழ்க்கையில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது.
எனவே தற்போது கட்டாய வெற்றியை எதிர்நோக்கி காத்திருக்கும் தனுஷிற்கு வெற்றியை தர வெற்றிமாறனை அணுகியுள்ளார். தன் நிலைமையை எடுத்துக்கூறி மீண்டும் படம் பண்ணலாம் என்று வெற்றிமாறனிடம் கேட்டுள்ளார்.
வெற்றிமாறன்
இருப்பினும் தற்போது வெற்றிமாறன் விடுதலை மற்றும் வாடிவாசல் ஆகிய படங்களில் பிஸியாக இருக்கின்றார். இதைத்தொடர்ந்து தன் நெருங்கிய நண்பரான தனுஷே படம் பண்ணலாம் என கேட்டுள்ளதால் என்னசெய்வதென்று தெரியாமல் குழப்பத்தில் வெற்றிமாறன் உள்ளதாக தகவல்கள் வருவது குறிப்பிடத்தக்கது.
வலிமை விமர்சனம்; அஜித் ரசிகர்களின் அட்டகாசம்!