திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வனப்பகுதியில் 3-ஆவது நாளாக காட்டுத்தீ கொளுந்துவிட்டு எரிந்து வருகிறது.
மச்சூர் வனப்பகுதிக்குட்பட்ட தோகைவரை வனப்பகுதியில் காட்டுத்தீயால், சுமார் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவிலான மரங்கள், அரியவகை மூலிகை செடிகள் தீயில் கருகி நாசமாகின.
ஒரு பகுதியில் வனத்துறையினர் தீயை அணைத்து வந்தாலும் மற்றொரு பகுதியில் காற்றின் வேகம் காரணமாக தீ வேகமாக பரவி வருகிறது.கொளுந்துவிட்டு எரிந்து வரும் காட்டுத்தீயை கட்டுப்படுத்த முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர்.
தொடர்ந்து காட்டுத்தீ எரிந்து வருவதால் தோகைவரை, மச்சூர் உள்ளிட்ட பகுதிகள் புகைமண்டலமாக காட்சியளிக்கிறது.