திருச்செந்தூர் முருகன் கோவில் கடலில் நீராடிக் கொண்டிருந்த போது அலைகளில் சிக்கி உயிருக்கு போராடிய மூதாட்டி ஒருவர் மீட்கப்பட்டார்.
திருப்பூர் மாவட்டம் மூலனூரை சேர்ந்த மாரியம்மாள் நேற்று திருச்செந்தூர் கோவில் கடலில் நீராடிக் கொண்டிருந்தார்.அப்போது எதிர்பாராதவிதமாக அவருக்கு காலில் பாதிப்பு ஏற்பட்டதால் கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்டு கூச்சலிட்டார்.
அவர் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதை பார்த்த கோவில் கடற்கரை பாதுகாப்பு பணியாளர்கள் உடனடியாக கடலில் நீந்தி சென்று மாரியம்மாளை பத்திரமாக மீட்டனர். தகவல் அறிந்து விரைந்து வந்த கோவில் அதிகாரிகள் மூதாட்டியை கார் மூலம் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.