சென்னை: தமிழர்கள் எங்கிருந்தாலும் அவர்களை காப்பாற்றும் இயக்கம் திமுக தான் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழர்கள் என்றால் ஒரு உணர்வு வரும், அது உள்ளூர் தமிழர் என்றாலும் சரி, உக்ரைனில் இருந்தாலும் சரி. நாட்டிலேயே தமிழ்நாட்டில் மட்டும் தான் ஒரு குழு அமைத்து மாணவர்களை மீட்டு அழைத்துவந்துள்ளோம் என முதல்வர் கூறியுள்ளார்.