உக்ரைன் அதிபர்
ஜெலன்ஸ்கி புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ரஷிய ஆக்கிரமிப்பாளர்கள் ஏராளமான ஆயுதங்களை வைத்து இருக்கிறார்கள். ஆனால் ரஷியாவால் எங்களை வெற்றி கொள்ள முடியாது. அவர்களுக்கு வெற்றி கிடைக்காது.
அவர்களுக்கு அதற்கான வலிமை இல்லை. வெற்றி கொள்வதற்கான உத்வேகம் இல்லை. அவர்கள் வன்முறையை மட்டுமே வைத்து இருக்கிறார்கள். பயங்கரவாதத்தை மட்டுமே வைத்து இருக்கிறார்கள்.
படை எடுப்பாளர்களுக்கு இயல்பான வாழ்க்கைக்கு அடிப்படை இல்லை. ரஷியா ஒரு வெளிநாட்டு நிலத்துக்கு வந்தாலும் அவர்களது கனவுகள் சாத்தியமற்றது. ரஷியா படையெடுத்த எல்லா இடங்களிலும் கனவுகள் சாத்திய மற்றது.
ரஷியா, உக்ரைனில் புதிய போலி குடியரசை உருவாக்க முயற்சித்து வருகிறது. நாட்டை பிரிக்க சூழ்ச்சி செய்து வருகிறது.
போரை நிறுத்துவதற்கான பேச்சுவார்த்தையில் ரஷியா அடிப்படை வேறுபட்ட அணுகுமுறையை கொண்டுள்ளது. பேச்சு வார்த்தையில் ரஷியா இறுதி எச்சரிக்கைகளை மட்டுமே விடுத்தது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படியுங்கள்… உக்ரைனில் இருந்து இந்தியர்கள் மீட்பு- மத்திய அரசுக்கு ஜி.கே.வாசன் பாராட்டு