கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே ரயிலுக்கு அடியில் விழுந்த செல்போனை எடுக்கச் சென்ற கல்லூரி மாணவர் ஒருவர் மீது ரயில் ஏறி சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.
புலவனூரைச் சேர்ந்த பாரதிராஜா என்பவர் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 3-ஆம் ஆண்டு படித்து வந்தார். மயிலாடுதுறையில் இருந்து விழுப்புரத்திற்கு ரயிலில் சென்று கொண்டிருந்த போது பரங்கிப்பேட்டை ரயில் நிலையத்தில் அவரது செல்போன் தவறி கீழே விழுந்தது.
அதனை எடுக்க நின்று கொண்டிருந்த ரயிலுக்கு அடியில் சென்ற போது, எதிர்பாராத விதமாக ரயில் புறப்பட்டதில் ரயிலின் சக்கரத்தில் சிக்கி பாரதிராஜா உயிரிழந்தார். தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.