டெல்லி: உக்ரைன் போர் சூழல் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் உயர்மட்ட ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இந்தியாவின் பாதுகாப்பு தயார்நிலை மற்றும் உலகளாவிய சூழல் குறித்து மதிப்பாய்வு செய்ய பிரதமர் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் உள்ளிட்டோர் இந்த ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.
