சென்னை: திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு 5 தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தி வருகிறது. நடைப்பயிற்சி சென்ற பாதை,அவர் கடத்தப்பட்டதாக கூறும் பகுதி, உடல் கண்டெடுக்கப்பட்ட பகுதிகளில் சிறப்பு புலனாய்வு குழு ஆய்வு மேற்கொண்டுள்ளது. ஏற்கனவே ராமஜெயம் நடைப்பயிற்சி சென்றதாக கூறிய 15-க்கும் மேற்பட்ட சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்றது.