ஆந்திரப் பிரதேசம் மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் விஜயவாவடா – ஐதராபாத் தேசிய நெடுஞ்சாலையில் 6 பேரை ஏற்றிக்கொண்டு கார் சென்றுக் கொண்டிருந்தது.
அப்போது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் நாகார்ஜூனா சாகர் இடதுகரை கால்வாயில் கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் இரண்டு பெண்கள் மற்றும் ஒரு ஆண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்த 4 பேர் ஜக்கையப் பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் ஆறு மாத குழந்தை மற்றும் ஒருவரும் உயிரிழிந்தனர். காயமடைந்த மற்றொருவர் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
இறந்தவர்கள் அனைவரும் ஐதராபாத்தில் உள்ள சந்தா நகரைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் மேற்கு கோதாவரி மாவட்டம் ஜங்காரெட்டிகுடெம் பகுதிக்கு விழாவிற்காக சென்று கொண்டிருந்தபோது விபத்துக்குள்ளானதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும், வழக்குப்பதிவு செய்த போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படியுங்கள்.. பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பாராளுமன்றம் நாளை கூடுகிறது