சீனாவில் இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவாக தினசரி கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது.
அந்நாட்டில் இன்றைய கொரோனா பாதிப்பு 3,400ஆக பதிவாகியுள்ளது. இது நேற்றையை பாதிப்பை விட இரு மடங்கு அதிகம் என கூறப்பட்டுள்ளது.
சீனாவின் வடகிழக்கு பகுதிகளில் பெரும்பாலான நகரங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளன. ஷாங்காய் நகரில் முன்னெச்சரிக்கையாக பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன. மேலும், ஜிலின் மாகாணம் முழுமைக்கும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.