தனுஷும்,
ஐஸ்வர்யா
ரஜினிகாந்தும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இரண்டு வளர்ந்த மகன்கள் இருக்கும் நிலையில் அவர்கள் பிரிந்துவிட்டனர்.
அவர்களை சேர்த்து வைக்க இரு வீட்டாரும் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். பிள்ளைகளை வைத்து தனுஷையும், ஐஸ்வர்யாவையும் சேர்த்து வைத்துவிடலாம் என்று நினைத்தார் ரஜினி.
டீல், டீல்: ஒரு முடிவுக்கு வந்த தனுஷ், ஐஸ்வர்யா
பிள்ளைகள் எனும் பிரம்மாஸ்திரத்தை ரஜினி பயன்படுத்தினார். ஆனால் தனுஷும், ஐஸ்வர்யாவும் அதற்கு எல்லாம் மடிவது போன்று இல்லை. பிள்ளைகள் சில நாட்கள் அப்பாவுடனும், சில நாட்கள் அம்மாவுடனும் இருக்கட்டும் என்று முடிவு செய்திருக்கிறார்களாம் தனுஷும், ஐஸ்வர்யாவும்.
இந்த முடிவை ரஜினி எதிர்பார்க்கவே இல்லையாம். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பே பிரிவது என்று தனுஷும், ஐஸ்வர்யாவும் முடிவு செய்திருந்தார்களாம். ஆனால் பிள்ளைகளுக்காக சேர்ந்து வாழுமாறு சமாதானம் செய்து வைத்தாராம் ரஜினி.
தற்போதும் அதே பிள்ளைகளை காரணம் காட்டி சேர்த்து வைக்க முயற்சி செய்து வருகிறார். ஆனால் இதுவரை பலன் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அப்பா, அம்மா இருவருடனும் சேர்ந்து ஒரே வீட்டில் இருக்க வேண்டும் என்கிற யாத்ரா, லிங்காவின் ஆசையும் நிறைவேறுவதாக இல்லை.