சீக்ரெட் சிஙகாரம்| Dinamalar

புதிய பாடம்!

மத்தியில் ஆளுங்கட்சி, கதர்காரங்க இல்லாத தேசத்த உருவாக்குவோம்னு சபதம் போட்டிருந்தாங்க. அவங்க நினைச்சது நடக்கற மாதிர ிதான் ஐந்து மாநில தேர்தல் ரிசல்ட்டும் வந்திருக்கு.இந்த தோல்வி கதர்காரங்களுக்கு பெரிய அடியை கொடுத்திருக்கு. முக்கியமா பஞ்சாப் ‘ரிசல்ட்’ அவங்களுக்கு பெரிய பாடத்தையே கத்து கொடுத்திருக்காம்.

அங்க மூத்த தலைவர், முன்னாள் சிஎம்ம புறக்கணிச்சது தான் தோல்விக்கு காரணம்னு நெனக்கிறாங்க. அதே மாதிரி கர்நாடகாவுலயும் நடக்க கூடாதுன்னு டில்லிக்காரங்க நினைக்கிறாங்க.ஏன்னா கர்நாடகாவுல மட்டும்தான் கதரு ஓரளவுக்கு பவரா இருக்கு. இருக்கற ஒரு ஸ்டேட்டையும் அவங்க இழக்க விரும்பலையாம். அதனால இங்க இருக்கற மூத்த தலைவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க முடிவு பண்ணி இருக்காங்க. அதே போல கட்சி மாறி வந்து முதல்வர் பதவியை வகிச்சவருக்கும் முக்கியத்துவம் கொடுக்க இருக்காங்களாம்.

ஏன்னா அவர முன்னிலைப்படுத்தினாத்தான் ‘அஹிந்தா’ ஓட்டுகள் அப்படியே கிடைக்கும்னு நெனக்கிறாங்க.முன்கூட்டியே தேர்தல்!ஐந்து மாநில தேர்தல் ஒரு கட்சிக்கு அதிர்ச்சியையும், மற்றொரு கட்சிக்கு சந்தோஷத்தையும் கொடுத்திருக்கு. இந்த சந்தோஷம் நம்ம ஸ்டேட் ‘பிளவர்’ கட்சிக்காரங்களுக்கும் தாங்க முடியாத உற்சாகத்த கொடுத்திருக்கு.இதே ஜோருல முன்கூட்டியே தேர்தல நடத்துனா வெற்றிக்கனி சுலபமாக கிடைக்கும்னு நினைக்கிறாங்க. இந்த வருஷ கடைசில குஜராத்துக்கு தேர்தல் நடக்க இருக்கு. அதே சமயத்துல கர்நாடகாவுலயும் தேர்தல் நடந்தா எதிர்பார்த்ததை விட நல்ல வெற்றி கிடைக்கும்னு நினைக்கிறாங்க. இது சம்பந்தமாக ‘சிட்டிங்’ சிஎம், ‘எக்ஸ்’ சிஎம் ரெண்டு பேரும் சந்திச்சி ஆலோசனை பண்ணி இருக்காங்க.

முன்கூட்டியே அசம்ளிக்கு தேர்தல் நடந்தா தலைநகர் மாநகராட்சி தேர்தலை நடத்த முடியாது. அதனால மாநகர தேர்தல தள்ளி வைக்கிறது, சம்பந்தமா ரெண்டு பேரும் ஆலோசனை பண்ணி இருக்காங்களாம்.கேபினட் விஸ்தரி்ப்பு எப்போ!ஆளுங்கட்சில நான்கு கேபினட் பதவி காலியா இருக்கு. அதோட சிலர மாத்திட்டு புது ஆளுங்களுக்கு வாய்ப்பு தர டில்லி மேலிடம் முடிவு பண்ணி இருக்கு.இதுக்கான நாள்தான் கூடி வரல. பல பேரு கேபினட் பதவிக்காக காத்திருக்கறாங்க. எப்ப பதவி கிடைக்கும்னு இருக்காங்க. முதல்ல புத்தாண்டுன்னு சொன்னாங்க, அப்புறம் ஐந்து மாநில தேர்தல்னு சொன்னாங்க. இப்போ தேர்தல் முடிஞ்சிருச்சி நல்ல முடிவுகள்கிடைச்சி இருக்கு.இதே சந்தோஷத்துல கேபினட்ட மாத்தணும்னு பதவியை எதிர்பார்த்து காத்திருக்கறவங்க நெருக்கடி கொடுத்திட்டு வராங்க. அதனால பட்ஜெட் கூட்டம் முடிஞ்ச உடனே முதல்வரு இது சம்பந்தமா டில்லி போவாருன்னு சொல்லப்படுது.

அதுக்கு அப்புறம் ஏப்ரல்ல கண்டிப்பா கேபினட்ட மாத்த வாய்ப்பிருக்குன்னு சொல்றாங்க.மகளிர் ஓட்டு மீது கண்!பூ கட்சில இப்ப பொது தேர்தல் வெற்றிக்கான வியூகங்கள் அமைச்சிட்டு வராங்க. அதுல ஒன்னுதான். கட்சி நிர்வாகிகளை மாத்தறது.பொதுவாக தேர்தல் நேரத்துல நிர்வாகிகளை மாத்துனா அது எதிர்விளைவை தான் ஏற்படுத்தும்.ஆனா மத்திய பிரதேசத்துல, இந்த ‘பார்முலா’ தேர்தல்ல வெற்றியை கொடுத்திச்சி.

அதே பார்முலவா இங்கயும் பாலோ பண்ண முடிவு பண்ணி இருக்காங்க. முதல்ல மாநில தலைவர மாத்த போறாங்களாம். இவருக்கு பதிலாக ரெண்டு பேர டில்லி தலைவர்கள் ‘டிக்’ பண்ணி வச்சிக்காங்க.ஒருத்தரு மலைநாட்டை சேர்ந்தவரு, எல்லா விஷயத்துலயும் பயரா கருத்து சொல்வாரு. கோவா தேர்தல்ல வெற்றியை தேடி கொடுத்தவரு.இன்னொருத்தரு கர்நாடகாவின் ஒரே ஒரு பெண் சென்ட்ரல் மினிஸ்டரு. இவரை வச்சி பெண்கள் ஓட்டுகள வாங்கலாம்னு நினைக்கிறாங்க. ஏன்னா மத்திய பிரதேசத்துகல பூ கட்சிக்கு 55 சதவீதம் பெண்கள் ஓட்டு கெடச்சதாம். எனவே பெண் தலைவரை கொண்டு வந்த மகளிர் ஓட்டு ஈசியா வரும்னு ஒரு கணக்கு போட்டு வச்சி இருக்காங்க.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.