2021-22ம் நிதியாண்டில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மீதான வட்டி விகிதம் 8.50 சதவீதத்தில் இருந்து 8.10 சதவீதமாக குறைத்து தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியின் மத்திய வாரிய குழு கூட்டத்தில் முடிவு செய்து அறிவிக்கப்பட்டது.
இதற்கு கண்டனம் தெரிவித்து, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மத்திய அரசை கடுமையா விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து மம்தா பானர்ஜி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
மக்கள் விரோத, தொழிலாளர் விரோத நடவடிக்கை, விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் நடுத்தர வர்க்கங்களின் இழப்பில் பெரும் மூலதனத்தின் நலன்களை ஆதரிக்கும் தலைகீழான பொதுக் கொள்கைகளை அம்பலப்படுத்துகிறது. கறுப்பு முயற்சி ஒன்றுபட்ட எதிர்ப்புகளால் முறியடிக்கப்பட வேண்டும்.
நாட்டின் நடுத்தர மற்றும் கீழ் நடுத்தர வர்க்க தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களின் தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிதி அழுத்தங்களுக்கு மத்தியில் வைப்பு நிதியின் வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது.
உ.பி. வெற்றிக்குப் பிறகு, பா.ஜ.க அரசு அதன் பரிசு அட்டையுடன் உடனடியாக வெளிவருகிறது. தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை நான்கு சகாப்தங்களில் இல்லாத அளவிற்கு குறைப்பதன் மூலம் பாஜக தனது முகமூடியை கழட்டி உண்மையான முகத்தை காட்டியுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படியுங்கள்..
பிரதமர் மோடி தலைமையில் மீண்டும் உயர்மட்ட ஆலோசனை கூட்டம்