பிரான்சில் நாளை முதல் கோவிட்-19 கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் நிலையில், 4-வது டோஸ் தடுப்பூசி விநியோகம் தொடங்கப்படுகிறது.
மூன்று மாதங்களுக்கு முன்பு கொரோனா வைரஸ் தடுப்பூசியின் இரண்டாவது பூஸ்டர் டோஸ் பெற்ற 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நான்காவது டோஸை பிரான்ஸ் வழங்குகிறது என்று பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ் தெரிவித்தார்.
பிரான்சில் கோவிட் -19 கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகிறது, இருப்பினும் முகக்கவசம் அணிய பரிந்துரைக்கப்படுவதாக காஸ்டெக்ஸ் கூறினார்.
பிரான்சில் மார்ச் 14, திங்கட்கிழமை முதல் தடுப்பூசி பாஸ் (Vaccine Pass) கைவிடப்படுகிறது. இது கொரோனா தொற்றுக்கு எதிராக மூன்று முறை தடுப்பூசி போட்டவர்களுக்கு வழங்கப்படும் சான்றிதழாகும்.
இந்த பாஸ் இருந்தால் மட்டுமே சினிமாக்கள் அல்லது உணவகங்கள் போன்ற பொது இடங்களுக்குள் நுழைய அனுமதி அளிக்கப்பட்டது. நாளை முதல் இந்த பாஸை பொது இடங்களில் காண்பிக்கப்படவேண்டிய கட்டாயம் இல்லை.
PC: Reuters
ஆனால், மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களைப் பாதுகாப்பதற்காக மருத்துவமனை அல்லது முதியோர் இல்லத்திற்குச் செல்ல இதேபோன்ற பாஸ் தேவைப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், நாளை முதல் பொதுப் போக்குவரத்தில் மட்டுமே முகக்கவசம் தேவைப்படும், மேலும் பணியிடத்திலோ அல்லது பள்ளியிலோ இனி தேவையில்லை.
பிரான்சில் இதுவரை 23 மில்லியனுக்கும் அதிகமானோருக்கு கோவிட் -19 பாதிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது, அவற்றில் 140,000-க்கும் அதிகமானர்கள் பயங்கரமாக பாதிக்கப்பட்டனர்.
இதைப் படியுங்கள்: பிரான்சில் பரபரப்பு! பொலிஸ் அதிகாரி மீது கத்திக்குத்து தாக்குதல்