உ.பி. தேர்தல் வெற்றி கொடுத்துள்ள உற்சாகம்… மோடி எடுக்கவுள்ள அதிரடி முடிவு!

403 சட்டமன்ற தொகுதிகள், 80 எம்.பி., தொகுதிகள் என நாட்டின் மிகப்பெரிய மாநிலமாக
உத்தரப் பிரதேசம்
திகழ்கிறது. இதன் காரணமாக நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலோ, மாநில சட்டப்பேரவைத் தேர்தலோ அதனை பல கட்டங்களாக நடத்த வேண்டியுள்ளது.

இதனால் இந்த மாநிலத்தில் மட்டும் தேர்தல் பிரசாரம் மேற்கொள்வது அரசியல் கட்சித் தலைவர்களுக்கு கடும் சவாலாக உள்ளது. இதேபோன்று தேர்தல் ஆணையத்துக்கும் உ.பி., தேர்தலை நடத்துவது கடும் சவாலான விஷயமாக இருந்து வருகிறது.

மேலும், பெரிய மாநிலமாக இருப்பதால் இதனை நிர்வகிப்பதிலும் ஆட்சியாளர்கள், அரசு அதிகாரிகளுக்கு பெரும் சிரமத்தை சந்தி்த்து வருகின்றனர்.

பெண்கள் பாதுகாப்புக்கு பாஜக ஆட்சி: ஸ்மிர்தி இராணி தகவல்!

இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு உத்தரப் பிரதேச மாநிலத்தை இரண்டாக பிரிக்க
பிரதமர் மோடி முடிவு
செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான நடவடிக்கைகளை மத்திய பாஜக அரசு விரைவில் எடுக்க உள்ளதாகவும் தெரிகிறது.

பிரதமர் மோடியின் இந்த முடிவை காங்கிரஸ் தவிர, பிற எதிர்க்கட்சிகளான சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகளும், பாஜகவினரும் இப்போதபிரதமரின் அந்த முடிவை இப்போதே வரவேற்றுள்ளனர்.

காங்கிரசில் இருந்து ராகுல், பிரியங்கா விலகல்? – வெளியான ஷாக் நியூஸ்!

வாஜ்பாய் தலைமையிலான பாஜக அரசு மத்தியில் ஆட்சியில் இருந்தபோது, நவம்பர் 9, 2000 இல் உத்தரப் பிரதேச மாநிலத்தின் சில பகுதிகளை பிரித்து உத்தராகண்ட் மாநிலம் புதிதாக உருவாக்கப்பட்டது. 22 ஆண்டுதளுக்கு பிறகு தற்போது மீண்டும் உத்தரப் பிரதேச மாநிலத்தை பிரி்க்கும் முடிவை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.