மருந்தகங்களில் இரத்தப் பரிசோதனைகள் உள்ளிட்ட சோதனைகள் செய்வது தொடர்பாகக் கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணாநகரில் லேப் டெக்னீசியன்களின் கருத்தரங்கில் பேசிய அவர், லேப் டெக்னீசியன்கள் 8 கோரிக்கைகளை வழங்கியுள்ளதாகவும், அதைப் பரிசீலிக்கக் குழு அமைத்து 60 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.