முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பை உறுதி செய்ய சுதந்திரமான குழுவை அமைக்க வேண்டும் என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் டீன் க்ரியாக்கோஸ் உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்துள்ளார்.
முன்னதாக, கேரளாவை சேர்ந்த பல்வேறு அமைப்புகள் சார்பாக இது தொடர்பாக வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. அதில், ‘முல்லைப் பெரியாறு அணையின் கீழ் பகுதியில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். பருவமழை காலத்தில், அதாவது ஜூலை முதல் செப்டம்பர் வரை அணையின் நீர்மட்டத்தை 130 அடியாக தேக்குவதற்கு உத்தரவிட வேண்டும்’ என கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது. இவ்வழக்கில் தன்னையும் ஒரு மனுதாரராக சேர்க்க வேண்டும் என இடுக்கி நாடாளுமன்ற உறுப்பினர் டீன் க்ரியாகோஸ் மனு அளித்துள்ளார்.
அணையின் கீழ் பகுதியில் வசிக்கும் மக்களின் வீடுகளுக்கும், ரப்பர் பயிர்களுக்கும், அணையின் பாதுகாப்பை காரணம் காட்டி, காப்பீடு போன்றவை மறுக்கப்படுவதாகவும் டீன் க்ரியாகோஸ் தமது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்திய செய்தி: நிலத்தில் புதைந்திருக்கிறதா அளவற்ற ஆற்றல்? நிறுவனம் மேற்கொள்ளவுள்ள பிரம்மாண்ட திட்டம்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM