கலபுரகி : காதல் திருமணம் செய்தவரை சமாதானத்துக்கு அழைத்து கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் கலபுரகியில் நடந்தது.கலபுரகியை சேர்ந்தவர் சுஷ்மிதா, 23. இவர் கல்லுாரியில் படிக்கும்போது டேசி என்பவரிடம் டியூஷனுக்கு சென்றார்.
அப்போது அவரது தம்பி பிரீதமுடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இந்த காதலுக்கு சுஷ்மிதா பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், இருவரும் பீதருக்கு சென்று திருமணம் செய்து கொண்டனர். பின் பெங்களூரில் தனி வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வந்தனர்.இந்நிலையில் சில நாட்களுக்கு முன் முகமது என்பவர் இருவருக்கும் போன் செய்து, கலபுரகிக்கு வா; சமாதானம் பேசி கொள்ளலாம் என கூறி அழைத்தார்.
ஒரு வாரத்துக்கு முன் இருவரும் கலபுரகி சென்றனர். நேற்று முன்தினம் முகமது வீட்டுக்கு சென்று விட்டுபிரிதம் திரும்பி கொண்டிருந்தார்.அப்போது வழி மறித்த சுஷ்மிதா உறவினர்கள், அவரை கத்தியால் குத்தி கொலை செய்தனர். இது தொடர்பாக நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
கலபுரகி : காதல் திருமணம் செய்தவரை சமாதானத்துக்கு அழைத்து கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் கலபுரகியில் நடந்தது.கலபுரகியை சேர்ந்தவர் சுஷ்மிதா, 23. இவர் கல்லுாரியில் படிக்கும்போது
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.