மகன் எம்.எல்.ஏ., தாய் அரசு பள்ளியில் துப்புரவு பணியாளர்! பஞ்சாபில் ஆச்சரிய சம்பவம்


இந்தியாவில் பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரை தோற்கடித்த ஆம் ஆத்மி எம்.எல்.ஏவின் தாயார் இன்னும் துப்புரவு பணியாளராக பணியாற்றுகிறார் என்பது ஆச்சரியத்தை அளிக்கிறது.

ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏ லப் சிங் உகோகேயின் (Labh Singh Ugoke) தாயார் பல்தேவ் கவுர் (Baldev Kaur), பஞ்சாபில் 2022 சட்டமன்றத் தேர்தலில் தனது மகன் வெற்றி பெற்ற பிறகும், சனிக்கிழமை அரசுப் பள்ளியில் துப்புரவுப் பணியைத் தொடர்ந்தார்.

பதவி விலகும் முன்னாள் முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னியை 37,550 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்த உகோகே, மொபைல் பழுதுபார்க்கும் கடையில் வேலை செய்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தனது மகன் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளராக வெற்றி பெற்றதில் மகிழ்ச்சியடைந்த பல்தேவ் கவுர், ‘ஜாடு’ (துடைப்பம்) எனது வாழ்வின் முக்கிய அங்கம் என்று கூறினார்.

“நாங்கள் எப்போதும் பணம் சம்பாதிப்பதற்காக கடினமாக உழைக்கிறோம். எனது மகனின் பதவியைப் பொருட்படுத்தாமல், பள்ளியில் எனது கடமையை நான் தொடர்ந்து செய்வேன்,” என்று கவுர் கூறினார்.

“அவர் மாநில முதலமைச்சரை எதிர்த்துப் போட்டியிட்டாலும், எனது மகன் வெற்றி பெறுவார் என்று நாங்கள் எப்போதும் நம்பிக்கையுடன் இருந்தோம்” என்று அவர் கூறினார்.

அவர் வேலைபார்க்கும் அதே பள்ளியில் தான் உகோக் படித்து பல விருதுகளை பெற்றுள்ளார் என்று அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் அம்ரித் பால் கவுர் கூறினார்.

“லாப் சிங்கின் தாயார் இந்தப் பள்ளியில் நீண்ட காலமாக துப்புரவுப் பணியாளராகப் பணிபுரிகிறார். அவரும் இந்தப் பள்ளியில்தான் படித்துள்ளார். அவர் தனது கிராமத்திற்கும் பள்ளிக்கும் பல விருதுகளைக் கொண்டு வந்துள்ளார். பள்ளியில் தொடர்ந்து பணியாற்ற விரும்புவதாக கவுர் கூறுகிறார்” என்றார் அம்ரித் பால் கவுர்.

லப் சிங் உகோக்கின் தந்தை தர்ஷன் சிங், கூலி வேலை செய்து வந்த அவர், மகன் எம்.எல்.ஏ ஆனாலும் குடும்பம் முன்பு போல் வாழ்வோம் என்றார். தனது மகன் குடும்பத்தை விட மக்கள் நலனில் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் விரும்புவதாக கூறினார்.





Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.