புதுடெல்லி:
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் இன்று உயர்மட்டக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில், மத்திய மந்திரிகள் நிர்மலா சீதாராமன், ராஜ்நாத் சிங், ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் உயர் அதிகாகிள் பங்கேற்றனர்.
உக்ரைன் போர் சூழலால் உலக நாடுகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் நாட்டின் பாதுகாப்பு நிலவரம் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.
எல்லைப் பகுதிகள், கடல் மற்றும் வான்வெளியில் இந்தியாவின் பாதுகாப்புத் தயார்நிலை மற்றும் பல்வேறு அம்சங்கள் குறித்து பிரதமர் மோடிக்கு அதிகாரிகள் எடுத்துரைத்தனர். உக்ரைனில் இருந்து இந்தியர்கள் மற்றும் சில அண்டை நாடுகளைச் சேர்ந்தவர்களை வெளியேற்றுவதற்கான ஆபரேஷன் கங்கா திட்டத்தின் செயல்பாடுகள் மற்றும் உக்ரைனின் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்தும் அதிகாரிகள் விளக்கினர்.
அப்போது, உக்ரைனின் கார்கிவ் நகரில் உயிரிழந்த கர்நாடக மாணவர் நவீன் சேகரப்பாவின் உடலை மீட்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.