புதுடெல்லி:
டெல்லியில் காங்கிரஸின் காரிய கமிட்டி கூட்டம் துவங்கியது.
இந்த கூட்டத்தில் 5 மாநில தேர்தல் தோல்வி உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது.
இந்த கூட்டத்தில் ராகுல்காந்தி காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்க வேண்டும் என ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் உள்ளிட்ட தலைவர்கள் வலியுறுத்தப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர் தேர்தலை முன்கூட்டியே நடத்துவது குறித்து விவாதிக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
உடல்நலக்குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இன்றைய செயற்குழு கூட்டத்தில் பங்கேற்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.