தனுஷும்,
ஐஸ்வர்யா
ரஜினிகாந்தும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். 18 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த அவர்கள் தாங்கள் பிரிவதாக கடந்த ஜனவரி மாதம் 17ம் தேதி இரவு சமூக வலைதளங்களில் அறிவிப்பு வெளியிட்டனர்.
அதன் பிறகு அவரவர் வேலையில் கவனம் செலுத்தி வருகிறார்கள். தனுஷையும், ஐஸ்வர்யாவையும் சேர்த்து வைக்க ரஜினி தான் பெருமுயற்சி செய்து வருகிறார். முதலில் இறங்கி வந்த தனுஷும், ஐஸ்வர்யாவும் தற்போது முடியாது, முடியாது என்கிறார்களாம்.
மகன்கள் யாத்ரா, லிங்காவுக்காகவாவது சேர்ந்து வாழுங்களேன் என்கிறாராம் ரஜினி. அதற்கும் இருவரும் மசியவில்லையாம். மேலும் பிள்ளைகளுடன் நேரம் செலவிடுவது குறித்து ஒரு முடிவுக்கு வந்துவிட்டார்களாம்.
இதை எல்லாம் பார்த்தால் இனி தனுஷும், ஐஸ்வர்யாவும் சேர வாய்ப்பே இல்லை என்கிறார்கள் கோடம்பாக்கத்தில். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பே பிரிய வேண்டிய ஜோடி, இப்போது தான் பிரிந்திருக்கிறது.
குழந்தைகளுக்காக 6 ஆண்டுகளாக பல்லைக் கடித்துக் கொண்டு இருந்தார்கள். அவர்கள் வளரட்டும், பிரிந்துவிடலாம் என்று காத்திருந்தார்கள். பிள்ளைகள் வளர்ந்துவிட்டார்கள். இனி தனுஷும், ஐஸ்வர்யாவும் சேர்ந்து இருக்க மாட்டார்கள் என்று அவர்களுக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆத்தி, ஆரம்பிச்சுட்டாங்களே: ஐஸ்வர்யா விஷயத்தில் உஷாரான சிம்பு