Mehreen Pirzadaa may joins Vijay next movie: நடிகர் விஜய்யின் 66-வது படத்தில், தனுஷ் பட நடிகை மெஹ்ரீன் பிர்சாதா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் படத்தின் பணிகள் கிட்டதட்ட முடிவடைந்துள்ளது. இந்தநிலையில், விஜய்யின் அடுத்தப்படமாக, ‘தளபதி 66’ படத்தின் ப்ரீ புரொடக்ஷன் பணிகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில், படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் தயாராக உள்ளது. விஜய்யுடன் இந்த படத்தில் கோலிவுட் மற்றும் டோலிவுட் நட்சத்திரங்களும் உள்ளனர்.
தற்போது, ’தளபதி 66′ படத்தில் மெஹ்ரீன் பிர்சாதா நடிக்க வாய்ப்பு இருப்பதாக சமீபத்திய தகவல் தெரிவிக்கிறது. இவர் ‘பட்டாஸ்’ படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நாயகியாக நடித்தவர் ஆவார். தெலுங்கில் பிரபலமான நடிகையான மெஹ்ரீன் பிர்சாதா, பல வெற்றிப் படங்களிலும் நடித்துள்ளார். தளபதி 66 படத்தில் மெஹ்ரீன் பிர்சாதாவை நடிக்க வைக்க தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர், இதற்காக அவருடன் படக்குழு பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.
இதையும் படியுங்கள்: மாறன் திரை விமர்சனம்: தனுஷால்கூட காப்பாற்ற முடியவில்லை
ஆனால் விஜய் படத்தில் நடிப்பது குறித்து மெஹ்ரீன் பிர்சாதா அதிகாரப்பூர்வமாக எதையும் தெரிவிக்கவில்லை. ‘தளபதி 66’ படத்தின் நடிகர்கள் மற்றும் குழுவினரின் முழு பட்டியல் படப் பூஜைக்கு முன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ‘தளபதி 66’ படத்தின் படப்பிடிப்பு முறையான பூஜைக்குப் பிறகு ஆரம்பிக்கப்பட உள்ளது. இந்தப்படத்தின் படப்பிடிப்பிற்காக படக்குழு பல்வேறு இடங்களுக்குச் செல்ல உள்ளது.
மேலும், இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா மற்றும் விவேக் ஓபராய் ஆகியோரும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்தபடம் மூலம் தமன் முதல் முறையாக விஜய்க்கு இசையமைக்க உள்ளது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil“