Health benefits of black pepper and cloves in tamil: நாம் அன்றாடம் பயன்படுத்தும் சில எளிய மசாலாப் பொருட்கள் ஆச்சரியமளிக்கும் ஆரோக்கிய நன்மைகளை நமக்கு வழங்குகின்றன. ஆனால் நாம் பெரும்பாலும் உணவை உட்கொள்ளும்போது, அவற்றை விலக்கி வைக்கவே விரும்புவோம். ஆனால் அவை தரும் நன்மைகளைப் பற்றித் தெரிந்தால், இனி நீங்கள் அவற்றை ஒதுக்க மாட்டீர்கள். அத்தகைய அற்புத ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ள மிளகு மற்றும் கிராம்பின் நன்மைகள் குறித்து இப்போது பார்ப்போம்.
கொரோனா நோய் தொற்றானது, நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியை நாம் அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளது. அடுத்தடுத்து பரவி வரும் கொரோனா மாறுபாடுகளுக்கு இடையே, நமது ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் நமக்கு நல்ல உணவு பழக்கம் தேவைப்படுகிறது.
அத்தகைய உணவுப் பொருட்களில், கிராம்பு, மிளகு, இலவங்கப்பட்டை, சீரகம் மற்றும் ஏலக்காய் ஆகியவை பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்ட முக்கிய பொருட்கள். இவை ஒவ்வொரு இந்திய சமையலறைகளிலும் காணப்படுகின்றன.
மிளகு நன்மைகள்
மிளகானது தூள் வடிவத்திலும் முழு வடிவத்திலும் எடுத்துக் கொள்ளப்படுகிறது. இது இந்திய குடும்பங்களில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் மசாலாப் பொருட்களில் ஒன்றாகும், மேலும் இது லேசான காரமான சுவையைக் கொண்டுள்ளது, இது சுவை மொட்டுகளுக்கு புத்துணர்வு அளிக்கிறது. இது வாதம், தோல் நோய்கள் போன்ற நோய்களைக் கட்டுப்படுத்தும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது மற்றும் இரத்த குளுக்கோஸ் அளவையும் கொலஸ்ட்ராலையும் கட்டுப்படுத்துகிறது. மிளகு மசாலா ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதை அதிகரிக்கவும் மற்றும் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் அறியப்படுகிறது.
தினசரி உணவில் மிளகை சேர்த்துக் கொள்வது எப்படி?
உங்கள் தினசரி உணவில் மிளகு சேர்ப்பது எளிதானது. தேநீர், காபி மற்றும் பிற சூடான பானங்களில் சுவையை மேம்படுத்த தூள் அல்லது முழு மிளகை சேர்க்கலாம். நம்முடைய பெரும்பாலான உணவுப் பொருட்களில் மிளகு சேர்க்கப்பட்டே சமைக்கப்படுகிறது. நீங்கள் சாலடுகள் மற்றும் சூப்களில் மிளகை சேர்க்கலாம்.
இதையும் படியுங்கள்: இட்லி, தோசை, சப்பாத்திக்கு ஏற்ற ‘தக்காளி தால்’… இப்படி செஞ்சு அசத்துங்க!
கிராம்பு நன்மைகள்
கிராம்பு இனிப்புகளில் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. இது அற்புத நறுமணம் தருவதோடு ஏராளமான ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. இதில், வைட்டமின் கே, மாங்கனீஸ் மற்றும் நார்ச்சத்து நிறைந்த கிராம்புகளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இவை புற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் பயனுள்ளதாக இருக்கும். கூடுதலாக, அவை எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன மற்றும் இரத்த குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்துகின்றன.
தினசரி உணவில் கிராம்பை சேர்த்துக் கொள்வது எப்படி?
கிராம்புகளை பல காய்கறி மற்றும் இறைச்சி உணவுகளில் சேர்க்கலாம், ஏனெனில் அவை சுவை மற்றும் நறுமணத்தை தருகின்றன. தேநீர் தயாரிக்கும் போது கொதிக்கும் நீரில் அவற்றைச் சேர்ப்பது உங்கள் அன்றாட உணவில் அவற்றை எடுத்துக் கொள்வதற்கான சிறந்த வழியாகும். அவற்றை அரிசி உணவில் சேர்ப்பது, குறிப்பாக குளிர்காலத்தில் சுவாச மண்டலத்தில் செயல்படும் அரிசியின் குளிர்ச்சியான தன்மையைக் கட்டுப்படுத்த ஒரு சிறந்த வழியாகும். கிராம்புகளை உட்கொள்ளும் மற்றொரு சிறந்த வழி, ஒரு டிடாக்ஸ் பானத்தை தயாரிப்பது, அதில் கிராம்பு போன்ற மசாலாப் பொருட்களையும் சுவை மற்றும் அளவுக்கேற்ப சேர்க்கலாம். காலையில் இரண்டு கிராம்புகளை தேனுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால், நோய் எதிர்ப்பு சக்தியை வளர்க்கலாம்.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil“