வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து வருவதால் திற்பரப்பு நீர் வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக உள்ளது.
சில வாரங்களாக குமரி மாவட்டத்தில் கடுமையான வெயில் அடித்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள பல்வேறு நீர் நிலைகள் வற்றத் துவங்கியுள்ளது.. இந்த நிலையில், குமரியின் குற்றாலம் என அழைக்கப்படும் திற்பரப்பு நீர் வீழ்ச்சிக்கு வரும் தண்ணீரின் அளவு குறையாமல் இருக்கிறது. இதனால் இந்த நீர்வீழ்ச்சியை நோக்கி தமிழகம் மற்றும் கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமையான இன்று, வார விடுமுறை நாள் என்பதால் காலையில் இருந்தே சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள், கடும் வெயிலின் தாக்கத்தை தணிக்கும் வகையில் பல மணிநேரம் உற்சாகமாக குளித்து மகிழ்ச்சியுடன் செல்கின்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM