பஞ்சாப் முதலமைச்சராகப் பொறுப்பேற்க உள்ள பக்வந்த் மான், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால் ஆகியோர் அமிர்தசரசில் பொற்கோவில், ஜாலியன் வாலாபாக் உள்ளிட்ட இடங்களுக்குச் சென்றனர்.
பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மிக் கட்சி 92 தொகுதிகளில் வென்று ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. புதிய முதலமைச்சராக பக்வந்த் மான் மார்ச் 16ஆம் நாள் பதவியேற்க உள்ளார்.
இந்நிலையில் இன்று அமிர்தசரசில் வெற்றிப் பேரணியையொட்டி பக்வந்த மான், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால் ஆகியோர் பொற்கோவில், துர்க்கியானா கோவில், வால்மீகி கோவில் ஆகியவற்றுக்குச் சென்று வழிபட்டனர். ஜாலியன் வாலாபாக் நினைவிடத்துக்கும் சென்று மரியாதை செலுத்தினர்.