பஸ் கட்டணத்தை அதிகரிப்பது தவிர்க்கமுடியாது எனவும் நாளை அமைச்சரவையில் இதுகுறித்து ஆராய்ந்த பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
நிதியமைச்சர், பஸ் உரிமையாளர்களின் சங்கத்துடன் இதுதொடர்பில் விரிவாகக் கலந்துரையாடியிருப்பதாக போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தனியார் பஸ்களுக்காக எரிபொருள் நிவாரணத்தை வழங்குவது தொடர்பில் ஆராய்வதே இந்தக் கலந்துரையாடலின் நோக்கமாகும். எனினும், அது நடைமுறைச்சாத்தியம் அல்லாத விடயம் என்று கலந்துரையாடலின் போது தெரிவிக்கப்பட்டது.
இதேவேளை, புதிய பஸ்கட்டண மறுசீரமைப்புத் தொடர்பில் பொருத்தமான நடைமுறைகள் குறித்து பஸ் சங்க உரிமையாளர்களும் தமது கருத்துக்களை முன்வைத்தனர்.
நாளை முதல் பயணிகளின் நாளாந்த நடவடிக்கைகளுக்குப் பாதகம் இல்லாத வகையில் போதுமான அளவு பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படுமெனவும், தமக்கு சிறந்த தீர்வை வழங்க வேண்டுமெனவும் பஸ் சங்க உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.