ஹிம்வீர்ஸ் என்றழைக்கப்படும் இந்திய – திபெத்திய எல்லை பாதுகாப்பு போலீசார், ஹிமாச்சலபிரதேசத்தில் கொட்டும் பனிப்பொழிவிற்கு இடையே கபடி விளையாடும் காட்சிகள் வெளியாகி உள்ளன.
இமயமலை எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் அந்த வீரர்கள் இமயமலை வீரர்கள் என்றும் அழைக்கப்படுகின்றனர்.
அவர்கள் தங்கள் ஓய்வு நேரத்தில் பனிக்கு மத்தியில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், பனியிலிருந்து காத்திடும் பிரத்யேக ஆடைகளை அணிந்து கொண்டு கபடி விளையாடி மகிழ்ந்த காட்சிகள் காண்போரை கவரும் வகையில் உள்ளன.