உக்ரைனுடனான போரில் சுமார் 38 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள ராணுவ தளவாடங்களை ரஷ்யா இழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் 18ஆவது நாளை எட்டியுள்ள நிலையில், இருதரப்பிலும் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ரஷ்ய ராணுவத்தின் இழப்புகளை மதிப்பிட்டுள்ள போர்ப்ஸ் பத்திரிகை, ரஷ்யாவின் 58 போர் விமானங்கள், 83 ஹெலிகாப்டர்கள், 363 பீரங்கிகள் என மொத்தம் சுமார் 2 ஆயிரத்து 593 ராணுவ தளவாடங்களை உக்ரைன் தாக்கி அழித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இதில், போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் அழிக்கப்பட்டதன் மூலம் மட்டும் ரஷ்யாவிற்கு 18 ஆயிரத்து 42 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.