புதுடெல்லி:
காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா தொடர்வார் என அதன் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. இதனை அடுத்து தோல்வி குறித்த காரணங்கள் பற்றி விவாதிக்க அக்கட்சியின் நிர்வாகிகள் கலந்ஆது கொண்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் மல்லிகார்ஜூனே கார்கே மற்றும் தினேஷ்குண்டுராவ் ஆகியோர், கட்சியின் இடைக்கால தலைவராக உள்ள சோனியா எங்களை வழிநடத்தி எதிர்கால முடிவை எடுப்பார். அவரது தலைமையின் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. ஐந்து மாநில தேர்தலில் ஏற்பட்ட தோல்வி குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. தொடர்ந்து வரவிருக்கும் தேர்தலை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து கூட்டதில் விவாதிக்கப்பட்டது என்றனர்.