உள்ளூர் தமிழராக இருந்தாலும், உக்ரைன் தமிழர்களாக இருந்தாலும் அனைத்து தமிழர்களையும் திமுக அரசு காப்பாற்றும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திருவாடுதுறை டி.என்.ராஜரத்தினம் இல்லத்திருமண விழாவில் பங்கேற்று பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும் தான் உக்ரைனில் இருந்த மாணவர்களை மீட்க முழு அமைக்கப்பட்டது எனவும், தமிழர்கள் எங்கிருந்தாலும் திமுக அவர்களை காப்பாற்றும் எனவும் கூறினார்.