சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் கீழ் வண்ணாரப்பேட்டை முதல் விமான நகர் வரை பயணிகள் ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது.
இவ்வழித்தடத்தில் திருவொற்றியூர் மற்றும் விம்கோ நகர் மெட்ரோ ரயில் நிலையங்களில் அனைத்து பணிகளும் முடிவடைந்துள்ளது. மேலும் மெட்ரோ ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு மேற்கொண்டு ஒப்புதல் அளித்ததன் அடிப்படையில் இவ்விரு மெட்ரோ ரயில் நிலையங்களும் இன்று முதல் பயணிகள் பயன்பாட்டுக்கு இயக்கப்படுகிறது.
இவ்விரு மெட்ரோ ரயில் நிலையங்களில் மெட்ரோ ரயில்கள் நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே திருவெற்றியூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் வாழும் மக்கள் மெட்ரோ ரயில் நிலைய சேவையை அதிக அளவில் பயன்பெறுவர். மேலும் மெட்ரோ ரயில் நிலையத்தில் இந்த மாதம் மட்டும் பயணிகள் தங்களது வாகனங்களை இலவசமாக நிறுத்திக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.