உக்ரைன் அகதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பவர்களுக்கு மாதம் 35,000 ரூபாய் வழங்கப்படும் என பிரிட்டன் அரசு அறிவித்துள்ளது.
ரஷ்யாவின் படையெடுப்பால் ஏராளமான உக்ரைன் மக்கள், நாட்டை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் தஞ்சமடைந்து வருகின்றனர். இந்நிலையில், ‘ஹோம்ஸ் பார் உக்ரைன்’ (Homes for Ukraine) என்ற திட்டத்தை அறிவித்துள்ள பிரிட்டன் அரசு, அகதிகளாக வருவோருக்கு குறைந்தபட்சம் 6 மாதங்கள் தங்க இடமளிப்பவர்களுக்கு மாதம் நிதியுதவி வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.
இந்த இக்கட்டான நிலையில் உக்ரைனுக்கு பிரிட்டன் துணை நிற்கும் என்றும், முடிந்தவரை விரைவாக பலருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டியதன் அவசியத்தை மக்கள் புரிந்துகொள்வார்கள் என்றும் அந்நாட்டின் வீட்டுவசதித் துறை அமைச்சர் மைக்கேல் கோவ் தெரிவித்துள்ளார்.