அரபி குத்து பாடலுக்கு நடனமாடிய ஆஷ்னா சாவேரி!
விஜய்யின் பீஸ்ட் படத்தில் அனிருத் இசையில் உருவாகி வெளியாகியுள்ள அரபி குத்து பாடல் சோசியல் மீடியாவில் வெளியிடப்பட்டு மிகப்பெரிய சாதனை செய்து வருகிறது. அதோடு சமந்தா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பல சினிமா நடிகைகள் மற்றும் சின்னத்திரை பிரபலங்களும் இந்த பாடலுக்கு நடனம் ஆடி சோசியல் மீடியாவில் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள். இந்த நிலையில் சந்தானத்துடன் வல்லவனுக்கும் புல்லும் ஆயுதம் என்ற படத்தில் நடித்து தமிழுக்கு வந்த ஆஷ்னா சாவேரியும் தற்போது அரபி குத்து பாடலுக்கு நடனமாடி ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார். அந்த வீடியோவுக்கு ரசிகர்கள் லைக் கொடுத்து வைரலாக்கி வருகிறார்கள்.