கொல்கத்தா:
மேற்கு வங்கம் மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் நடைபெற்ற இரு வேறு சம்பவங்களில் இரண்டு வார்டு கவுன்சிலர்கள் சுட்டுக் கொல்லப் பட்டுள்ளனர்.
ஜல்தா நகராட்சியைச் சேர்ந்த காங்கிரஸ் கவுன்சிலர் தபன் காண்டு, துப்பாக்கி தோட்டா பாய்ந்ததில் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
இத்தகவலை காங்கிரஸ் மாவட்ட தலைவர் நேபாள மஹதோ உறுதிப் படுத்தியுள்ளார். கவுன்சிலர் கொலையைகண்டித்து புருலியா மாவட்டத்தில் நாளை 24 மணி நேர பந்த் நடத்த காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது.
இதேபோல்,பானிஹாட்டி நகராட்சியின் 8வது வார்டு திரிணாமுல் காங்கிரஸ் கவுன்சிலர் அனுபம் தத்தா, பைக்கில் வந்த 4 மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதாக மேற்கு வங்க காவல்துறை தெரிவித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை மாலை வீடு திரும்பிய அவர், தலையில் துப்பாக்கியால் சுடப்பட்டார். முதலில் கமர்ஹாட்டியில் உள்ள மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டார், பின்னர் பெல்காரியாவில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கு அவர் மாற்றப்பட்டார். அங்கு அவர் இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது என்று காவல்துறை குறிப்பிட்டுள்ளது.
இரண்டு வெவ்வேறு கட்சிகளை சேர்ந்த கவுன்சிலர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் மேற்கு வங்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படியுங்கள்…
ரெயிலில் இருந்து தவறி விழுந்த பயணி… நொடிப்பொழுதில் காப்பாற்றிய ஆர்.பி.எப். வீரர்