சீனாவில் 2020 காலகட்டத்தில் காணப்பட்ட அதே அளவு கொரோனா தொற்று எண்ணிக்கை எட்டியுள்ள நிலையில் மில்லியன் கணக்கான மக்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
சீனாவில் கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கொரோனா பரவல் அதிகரித்துள்ளது.
ஞாயிறன்று மட்டும் 1,938 பேர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது முந்தைய நாள் எண்ணிக்கையைவிட மூன்று மடங்கு என தெரிய வந்துள்ளது. ஷென்சென் தெற்கு வணிக மையம் மூடப்பட்டுள்ளது, ஷாங்காய்க்கான போக்குவரத்து தடைசெய்யப்பட்டுள்ளது மற்றும் பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.
ஷென்சென் பகுதியில் வசிக்கும் 17.5 மில்லியன் மக்களுக்கு மூன்று கட்ட கொரோனா சோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
உணவு, எரிபொருள் மற்றும் இதர தேவைகளை வழங்கும் வணிகங்களைத் தவிர அனைத்தும் மூட அல்லது வீட்டிலிருந்து வேலை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனிடையே ஹொங்ஹொங்கில் ஞாயிறன்று மட்டும் 32,000 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் சீனாவின் முக்கிய பகுதியை சேர்ந்த அதிகாரிகள் நகரை முழுமையாக ஊரடங்கிற்கு கொண்டு வந்துள்ளதுடன், கொரோனா பாதிப்புக்குள்ளான மக்களை அடையாளம் கண்டு அவர்களை தனிமைப்படுத்தலுக்கும் அனுப்பி வருகின்றனர்.
இதனிடையே, தொழில்துறை பெருநகரமான சாங்சுன் வெள்ளிக்கிழமை முழு ஊரடங்கிற்கு கொண்டுவரப்பட்டது.
மட்டுமின்றி பலருக்கு கொரோனா பாதிப்பு அடையாளம் காணப்பட்ட நிலையில் குடும்பங்களை வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.