ஒரே போஸ்டில் தனுஷ் குடும்பத்துக்கு ஷாக் கொடுத்த ஐஸ்வர்யா!


ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது ஒரே ஒரு இன்ஸ்டாகிராம் ஸ்டோரியல் தனுஷின் மொத்த குடும்பத்துக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

சமீபத்தில் தனுஷிடம் இருந்து பிரிந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த், அவரது சகோதரரும் இயக்குநருமான செல்வராகவனின் பிறந்தநாளுக்கு தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வாழ்த்து தெரிவித்தார்.

செல்வராகவனை கட்டிப்பிடித்தபடி எடுத்த அழகான புகைப்படத்தைப் பகிர்ந்துகொண்ட ஐஸ்வர்யா, செல்வராகவன் தனது “குரு, நண்பர், அப்பாவை போன்றவர், இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்” என்று கூறி பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

தனுஷின் அண்ணன் மீதும் ஐஸ்வர்யா வைத்திருக்கும் மரியாதையை வெளிப்படுத்தும் இந்த பதிவு வெல்வாராகவன் மற்றும் தனுஷின் ஒட்டுமொத்த குடும்பத்தடுக்கும் நெகிழ்ச்சியூட்டும் இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

கோலிவுட்டின் பிரபல நடிகர் தனுஷ் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளும், இயக்குநருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் திருமணமாகி 18 வருடங்கள் ஆன நிலையில், அவர்கள் இருவரும் தங்கள் உறவிலிருந்து விலகுவதாக அறிவித்தனர். தற்போது ரஜினிகாந்த் மற்றும் தனுஷின் தந்தையும், பிரபல திரைப்பட தயாரிப்பாளருமான கஸ்தூரி ராஜா இருவரும், மீண்டும் இருவரையும் சேர்த்துவைக்க முயற்சித்துவருவதாக தகவல்கள் கசிந்தவண்ணம் உள்ளன.

நடிகர் தனுஷின் சகோதரரான செல்வராகவன், காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, மயக்கம் என்ன போன்ற படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமானவர். நானே வருவேன் என்ற தமிழ் படத்திற்காக சகோதரர்கள் இருவரும் மீண்டும் ஒன்றிணைத்துள்ளனர் இணைந்து பணியாற்றுகிறார்கள். அதன் படப்பிடிப்பு தற்போது நடந்துகொண்டிருக்கிறது. நானே வருவேன் படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.

தனுஷ் கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்குப் பிறகு தனது சகோதரர் செல்வராகவனுடன் இணைந்து பணியாற்றுகிறார். முன்னதாக இருவரும் துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை மற்றும் மயக்கம் என்ன போன்ற படங்களை கொடுத்துள்ளனர். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.