உக்ரைன் மீதான படையெடுப்பிற்கு தனது கடுமையான கண்டனத்தை தெரிவித்த போப் பிரான்சிஸ், “ஏற்றுக்கொள்ள முடியாத ஆயுத ஆக்கிரமிப்பு” நிறுத்தப்பட வேண்டும் என்று கூறினார்.
ஞாயிறு ஆசீர்வாத கூட்டத்திற்காக’ செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் ஆயிரக்கணக்கான மக்களிடம் போப் பிராசின்ஸ் உரையாற்றியது வருமாறு:
கன்னி மேரியின் பெயரைக் கொண்ட மரியுபோல் நகரம், உக்ரைனைப் பேரழிவிற்குள்ளாக்கும் அழிவுகரமான போரில் வீரமரணம் அடைந்த நகரமாக மாறியுள்ளது.
குழந்தைகள்,அப்பாவி மற்றும் பாதுகாப்பற்ற குடிமக்களைக் கொல்லும் காட்டுமிராண்டித்தனத்திற்கு முன், எந்த மூலோபாய காரணங்களும் இல்லை: நகரங்கள் கல்லறைகளாக மாறுவதற்கு முன்பு ஏற்றுக்கொள்ள முடியாத ஆயுத ஆக்கிரமிப்பை நிறுத்துவது மட்டுமே செய்ய வேண்டும்.
வேதனையான இதயத்துடன், போரை முடிவுக்குக் கொண்டு வரும் பொதுமக்களின் குரலுடன் எனது குரலைச் சேர்க்கிறேன். கடவுளின் பெயரால், துன்பப்படுபவர்களின் கூக்குரலுக்கு செவிசாய்த்து, குண்டுவெடிப்புகளுக்கும் தாக்குதல்களுக்கும் முடிவு கட்டுங்கள்!
மேலும் குடியிருப்பாளர்களை வெளியேற அனுமதிக்க “உண்மையான பாதுகாப்பான மனிதாபிமான வழித்தடங்களுக்கு” போப் மீண்டும் வேண்டுகோள் விடுத்தார்.
அனைத்து மறைமாவட்ட மற்றும் மத சமூகங்களையும் அமைதிக்காக பிரார்த்தனை செய்யும் தருணங்களை அதிகரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். கடவுள் அமைதியின் கடவுள் மட்டுமே, அவர் போரின் கடவுள் அல்ல, வன்முறையை ஆதரிப்பவர்கள் அவருடைய பெயரைக் களங்கப்படுத்துகிறார்கள் என்று போப் கூறினார்.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் பிப்ரவரி 24 அன்று படையெடுப்பிற்கு உத்தரவிட்ட போதிலும், போப் தனது கண்டனங்களில் “ரஷ்யா” என்ற வார்த்தையைப் பயன்படுத்தவில்லை.
ஆனால் “ஆயுதமேந்திய ஆக்கிரமிப்பு” மற்றும் “சரியான மூலோபாயக் காரணம் இல்லை” போன்ற அவரது வார்த்தைகள், படையெடுப்பிற்கான மாஸ்கோவின் நியாயங்களை எதிர்த்தது.
ரஷ்யா தனது நடவடிக்கையை “சிறப்பு இராணுவ நடவடிக்கை” என்று அழைக்கிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரான்சிஸ் அந்த வார்த்தையை மறைமுகமாக நிராகரித்தார், இது “வெறும் ஒரு இராணுவ நடவடிக்கை” என்று கருத முடியாது, மாறாக “இரத்தம் மற்றும் கண்ணீரின் ஆறுகளை” கட்டவிழ்த்துவிட்ட ஒரு போர் என்று கூறினார்.
ஆனால்’ மாஸ்கோ தனது நடவடிக்கையானது பிரதேசத்தை ஆக்கிரமிப்பதற்காக அல்ல, மாறாக அதன் அண்டை நாடுகளின் அனைத்து இராணுவப் படைகளையும் அகற்றவும், நாஜி படைகளை ஒழிக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று கூறுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“