-நமது சிறப்பு நிருபர்-”மூத்தவர்கள் தங்களின் பதவியை விட்டுத்தர வேண்டும். அமைச்சரவையில் இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்,” என கிராம அபிவிருத்தித்துறை அமைச்சர் ஈஸ்வரப்பா தெரிவித்தார்.ஈஸ்வரப்பா, மந்த்ராலயாவில் நேற்று கூறியதாவது:மூத்த அமைச்சர்கள், பதவியை விட்டுத்தர வேண்டும். நாங்கள் பதவியில் ஒட்டிக்கொண்டு அமர்ந்திருக்கவில்லை.
அமைச்சரவையில் இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்.பா.ஜ.,வை காங்கிரசுடன் ஒப்பிடாதீர்கள். பா.ஜ., சொர்க்கம். காங்கிரஸ் நரகம். இந்த புண்ணிய தலத்தில், காங்கிரஸ் பற்றி பேச வேண்டாம். இங்கு அமர்ந்து சென்றாலும் புண்ணியம் கிடைக்கும்.சித்தராமையா கால்களை, சிவகுமார் துண்டித்துள்ளார். பிற்படுத்தப்பட்டவர்களுக்கு, சித்தராமையா துரோகம் செய்துள்ளார்.பிற்படுத்தப்பட்ட பிரிவுகளின் மாநாடு நடத்தும் சுதந்திரம், இவருக்கு இல்லை. குருபர், பிற்படுத்தப்பட்ட பிரிவினரை, இவர் வளர்க்கவில்லை. சர்வாதிகாரி தோரணையே, இவர் தோல்விக்கு காரணம்.இவ்வாறு அவர் கூறினார்.
-நமது சிறப்பு நிருபர்-”மூத்தவர்கள் தங்களின் பதவியை விட்டுத்தர வேண்டும். அமைச்சரவையில் இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்,” என கிராம அபிவிருத்தித்துறை அமைச்சர் ஈஸ்வரப்பா
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.