நல்லாட்சிக் காலப்பகுதியில்எரிபொருள் கடனடிப்படையிலேயே பெற்றுக் கொள்ளப்பட்டது.
இந்த எரிபொருளுக்காகவெளிநாடுகளுக்கு மூவாயிரத்து 600 மில்லியன் அமெரிக்க டொலர்களை சமகால அரசாங்கத்தினால்செலுத்த இருப்பதாக எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.
உலக சந்தையின் எரிபொருள் விலைஅதிகரிப்பிற்கு ஏற்ப நாட்டில் எரிபொருளின் விலை அதிகரிக்கப்படாததனால் இந்த வருடம்ஜனவரி மாதத்தில் மாத்திரம் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு 7 பில்லியன் ரூபாநட்டம் ஏற்பட்டுள்ளது. பெப்ரவரி மாதத்தில் இந்த நட்டம் 12 தசம் 6 பில்லியன் ரூபாவாகஅதிகரித்துள்ளது.
இந்த மாதத்தில் நாளாந்தம் 800தொடக்கம் 900 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் எரிபொருள் விலையைஅதிகரிக்காவிட்டால் மார்ச் மாதத்தில் மொத்த நட்டம் 26 பில்லியன் ரூபாவாகஅதிகரிக்கும் என்றும் அமைச்சர் கூறினார்.
இதனால் விருப்பமின்றியேனும்,அரசாங்கத்தினால் எரிபொருள் விலையை அதிகரிக்க வேண்டி ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் காமினிலொக்குகே குறிப்பிட்டுள்ளார்.