எல்லோருக்குமே ஓய்வுக்காலத்துக்கென சில திட்டங்கள் இருக்கும். வருமானம் ஈட்ட முடியாத வயதில் அன்றாட செலவுகள், மருத்துவ செலவுகள் போன்றவற்றை நிர்வகிக்க வேண்டும், இவை போக உலகில் பிடித்த இடங்களுக்கு செல்ல வேண்டும் என்ற ஆசை இருக்கும். திருத்தலங்களுக்குச் செல்ல வேண்டும் என்று தோன்றும்.
இப்படி பல தேவைகளும் ஆசைகளும் கனவுகளும் உள்ளடக்கிய ஓய்வுக்காலத்தை எந்த நிதி நெருக்கடியும் இல்லாமல் கழிக்க வேண்டுமெனில் அதற்கு தேவையான நிதித் தொகுப்பை உருவாக்கிக் கொள்வது அவசியம். ஆனால் இதில் எல்லோருக்கும் எழுகிற கேள்வி, `எப்படி ஓய்வு காலத்துக்கான நிதி தொகுப்பை உருவாக்குவது’, `எது ஓய்வுகாலத்துக்கான சரியான முதலீடு’ என்பதுதான்.
அந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதில் அளிக்கும் விதமாக நாணயம் விகடன் மற்றும் ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் இணைந்து, `ஓய்வுக் காலத்திற்கான சரியான திட்டமிடல்..!’ என்ற ஆன்லைன் நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டுள்ளன. வருகிற மார்ச் 20-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை இந்த ஆன்லைன் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இதில் நிதி ஆலோசகர் வ.நாகப்பன், ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தை சேர்ந்த எஸ். குருராஜ் (முதலீட்டாளர் கல்வி – உதவி துணைத் தலைவர்), க.கருணாநிதி (பிராந்திய தலைவர் – தமிழ்நாடு) ஆகியோர் சிறப்புரையாற்றுகிறார்கள். ஓய்வுகாலத்துக்கான நிதி தொகுப்பை உருவாக்குவதில் உங்களுக்கு ஏற்படுகிற கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் இவர்கள் பதில் தரவிருக்கிறார்கள். இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பயன் அடையுங்கள்.
நிகழ்ச்சியில் கலந்துகொள்ள கட்டணம் ஏதுமில்லை முற்றிலும் அனுமதி இலவசம். http://bit.ly/NV-Aditya-Birla என்ற லிங்கில் பதிவு செய்யுங்கள்.