வரும் பட்ஜெட் தாக்கலின் போது புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யும் அறிவிப்பினை வெளியிட வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு ஆசிரியர் சங்க மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
திமுக தலைமையில் ஆட்சிப்பொறுப்பேற்றபிறகு நல்லாட்சி நடத்தி இந்திய மாநிலங்களிலேயே முதன்மை மாநிலமாக உயர்த்திவரும் மாண்புமிகு. முதலமைச்சர் அவர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் வாழ்த்திப்பாராட்டு கின்றோம்.
மேலும்,மார்ச் 18 ல் தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையில் பின்வரும் கோரிக்கைகளுக்கான அறிவிப்பை வெளியிட ஆவனச்செய்யும்படி தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
1. புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் ரத்துசெய்து பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைபடுத்திடவேண்டும்.
2. கொரோனா காலகட்டத்தில் கல்வி முடக்கத்தில் இருப்பதை மீட்டெடுத்துவருகின்றோம்.ஆனால் பள்ளிக்கல்வித்துறை மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்திட்டம் தினம் ஒரு அறிவிப்பு வெளியிட்டு ஆசிரியர்களுக்கு ஏதாவது ஒரு பயிற்சி, பயிற்சி இல்லையெனில் EMIS மூலமாக பதிவுகள் செய்யவைப்பது. இதன்மூலம் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பாடம் எடுக்கவிடாமல் கல்வியைத்தவிர மற்ற பணிகள் குறிப்பாக விவரம் சேகரித்தல் போன்று டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் பணியினையினை மேற்கொள்ளவேண்டிய சூழலே உள்ளது.இதனால் மாணவர்களுக்கு கல்வி பாதிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் பணியினைத்தவிர மற்ற பணிகளை தவிர்க்க வேண்டும். இப்பணிகளை செய்ய அலுவலக உதவியாளர் களையும் கணினி ஆசிரியர்களையும் நியமித்திடவும் ஆசிரியர்களின் உயர்கல்விக்கு ஊக்க ஊதியம் ஏற்கனவே இருந்தபடியே வழங்கிடவேண்டும்.
3.ஒருங்கிணைந்தப் பள்ளிக்கல்வி தொடக்க கல்வி முதல் மேல்நிலை கல்வி வரை பணியாற்றும் அனைத்து வகை ஆசிரியர்கள் பதவி உயர்வு எவ்வித பாகுபாடும் இன்றி பணியில்சேர்ந்த நாளையே தகுதி அடிப்படையில் பதவி உயர்வு பெற ஒரே மாதிரி பணிமூப்பு கொள்ளவேண்டும் .
4. 1997 முதல் 2000 வரை பட்டதாரி ஆசிரியர்களைக் கொண்டு இடைநிலை ஆசிரியர்களாக Sc/st ஆசிரியர்களை பணி அமர்த்த்ப்பட்ட நாள் முதல் பட்டதாரி ஆசிரியர்களாக பணிவரன்முறை செய்திடவேண்டும்.
5. .கொரோனா காரணமாக அரசு எடுத்த நடவடிக்கையின் மூலம் அரசுப் பள்ளியில் 5 லட்சத்து 50 ஆயிரம் மாணவர்கள் அதிகமாக சேர்ந்து இருக்கிறார்கள் எனவே மாணவர்களின் வருகையை தக்கவைத்துக்கொள்ள போதிய ஆசிரியர்களை நியமிக்கவேண்டும் .
6. பெருநகர சென்னை மாநகராட்சி கல்வித்துறையின் மூலம் நடத்தும் 281 சென்னைப் பள்ளிகளில் இந்த கல்வியாண்டில் மட்டும் 40,000 மாணவர்கள் கூடுதலாக சேர்ந்தபிறகும் உரிய நடவடிக்கை எடுத்து போதிய ஆசிரியர் நியமிக்காமலும் வருடந்தோறும் நடக்கும் ஆசிரியர் பதவி உயர்வு இடமாறுதல் கலந்தாய்வுக்குகூடமாநகராட்சி தனி நிருவாகஅமைப்பாக இருந்தும் துறைரீதியான அனுபவமின்றி பள்ளிக்கல்வித்துறையை நாடவேண்டிய சூழல் உள்ளது. ஆகையால கல்வித்துறையைச் சேர்ந்தவர்களைக்கொண்டு பள்ளிக்கல்வித்துறையைப்போன்று சென்னை மாநகராட்சியிலும் இணைஇயக்குநர் பதவி உருவாக்கி கல்வித்துறை கட்டமைப்பை மேம்படுத்திட வேண்டும்.
7.அரசுப்பள்ளி மாணவர்களின் சூழலை அறிந்து கலைஞர் காலைச்சிற்றுண்டி திட்டம் தொடங்கிடவேண்டும்.
8.மகளீரைப்போற்றும் வகையில் மகளீர் முன்னேற்றத்திற்காகபல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வரும் முதல்வர் அவர்கள் மேலும் ஒரு மைல் கல்லாக மகளீர் தினம் மார்ச் 8 ந்தேதியினை பொதுவிடுமுறை நாளாக அறிவித்திடவேண்டும்
9. 2009-க்கு பிறகு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களின் ஊதியம் முரண்பாடு களைந்திடவேண்டும்.
10. பகுதிநேர ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில்கொண்டு மே மாதம் ஊதியம் வழங்கிடவேண்டும்.
11.கோடை வெய்யில் தாக்கத்தால் குழந்தைகள் நலன்கருதி தொடக்க,நடுநிலைப்பள்ளிகளுக்கு ஏப்ரல் 30 க்குள் தேர்வுகள் முடிக்கவும், 9,10,11,12 ஆம் வகுப்புகளுக்கு தேர்வுத்தாள் திருத்தும்பணி மேற்கொள்ள வசதியாக மே 15 க்குள் தேர்வுகள் முடிக்கவும் ஆவனசெய்யவேண்டும்.
12.ஆசிரியர் தகுதித்தேர்வு TET தேர்ச்சிப்பெற்றும் மேலும் ஒரு போட்டித்தேர்வு என்பது ஜனநாயகத்துக்கு விரோதமான கடந்த அட்சிக்காலத்தில் வெளியிடப்பட்ட அரசாணையினை ரத்துசெய்திடவேண்டும்.
13.பள்ளிகளை எப்போதும் சுகாதாரமாக வைத்துக்கொள் நிரந்தர தூய்மைப்பணியாளர்களை நியமித்திடவேண்டும்.
14.அரசுப்பள்ளிகளின் கட்டிடம்,உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திடவேண்டும்.பள்ளிக்கு ஒரு வளவகுப்பறை Smart class ஏற்படுத்தவேண்டும்.
15. மாணவர்கள் உடலும் உள்ளமும் ஒருசேர இருந்தால்தான் கற்றல் நிகழ்வு முழுமைப்பெறும். ஆகையால் சனிக்கிழமையினை பள்ளி விடுமுறை நாளாக அறிவித்திடவேண்டும்
16. உயர்நிலை பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கையை கணக்கில் கொள்ளாமல் பாடத்தினை கணக்கில் கொண்டு 8 பட்டதாரி பணியிடங்கள் நடுநிலைப் பள்ளி களுக்கு 3 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் வேண்டும்.
17.தற்போது ஆசிரியராக இருந்து முதன்மைக்கல்வி அலுவலர்களாக இருப்பவர்கள் 6 பேர் மட்டுமே. ஆகையால், 50 சதவீதம் பேர் முதன்மைக்கல்வி அலுவலர்களாக பதவி உயர்வில் வரும்படி மாற்றியமைக்க வேண்டும்.
18.மெட்ரிக்,தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு குறைந்தபட்சம் 15000 ஊதிய நிர்ணயம் செய்ய அறிவுறுத்தவேண்டும்.
மேற்கண்ட 18. அம்சக்கோரிக்கை களை நிறைவேற்றும் வகையில் நிதிநிலை அறிக்கையில் இடம்பெறசெய்யய ஆவனசெய்யும்படி ஆசிரியர்-அரசு ஊழியர்களின் பாதுகாவலர் முதலமைச்சர் அவர்களை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பணிவுடன் வேண்டுகின்றேன் என தெரிவித்துள்ளார்.