புதுடெல்லி:
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது கட்ட அமர்வு இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. இந்தக் கூட்டத்தொடர் ஏப்ரல் 8-ம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்தியாவில் கொரோனா பரவல் கணிசமாகக் குறைந்துள்ளதால், இரு சபைகளும் வழக்கம்போல் காலையில் தொடங்கின.
இந்நிலையில், மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை மந்திரி ஹர்தீப் சிங் பூரி மாநிலங்களவையில் பெட்ரோல் விலை குறைத்து விளக்கம் அளித்தார்.
இதுதொடர்பாக, அவர் கூறுகையில், அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் பெட்ரோல் விலையை உயர்த்திய போதும் இந்தியா உயர்த்தவில்லை. பிற நாடுகள் பெட்ரோல் விலையை 50 சதவீதத்துக்கு மேல் உயர்த்திய போதும், இந்தியாவில் 5 சதவீதம் மட்டுமே உயர்த்தப்பட்டு உள்ளது என தெரிவித்தார்.