புதுடெல்லி:
சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் உத்தர பிரதேசத்தில் பா.ஜ.க. ஆட்சியை தக்கவைத்துள்ளது.
இதற்கிடையே, முதல் மந்திரியாக மீண்டும் பொறுப்பேற்க உள்ள யோகி ஆதித்யநாத் நேற்று தலைநகர் டெல்லி சென்றார். அங்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங், பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோரை சந்தித்துப் பேசினார்.
உத்தர பிரதேசத்தில் அமைய உள்ள புதிய அமைச்சரவை மற்றும் பாஜக அரசு பதவியேற்பு குறித்து பிரதமர், உள்துறை மந்திரி மற்றும் பாஜக தேசிய தலைவருடன் இந்த சந்திப்பின் போது ஆதித்யநாத் ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில், டெல்லியில் ராஷ்ட்ரபதி பவன் சென்ற யோகி ஆதித்யநாத் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை மரியாதை நிமித்தமாக சந்தித்தார் என ஜனாதிபதி மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.