ரஷ்யாவுக்கு உதவினால் சீனாவும் பொருளாதார தடை உள்ளிட்ட கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
உக்ரைன் மீதான போர் காரணமாக, ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார தடைகளை உலக நாடுகள் விதித்துள்ளன. இந்த நிலையில், இத்தாலி தலைநகர் ரோமில் வைத்து சீனாவின் உயர்மட்ட தூதரக அதிகாரி யாங் ஜீச்சியை சந்தித்த அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன், ரஷ்யாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளுமாறு வலியுறுத்தினார்.
பொருளாதார தடைகளில் இருந்து மீள்வதற்கு ரஷ்யாவுக்கு சீனா உதவி செய்தால் உலக நாடுகளில் இருந்து தனித்து விடப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.
சீனாவிடம் ஆயுதங்கள் வழங்குமாறு ரஷ்யா கேட்டிருந்த நிலையில், இந்த விவகாரத்தில் சீனா, ரஷ்யா பக்கம் இருப்பது, பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த தடைகளை சந்திக்க வழிவகுக்கும் என அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் சீனாவுக்கு தெளிவுபடுத்தியுள்ளன.