ரஷ்யா, மசகு எண்ணெய்மற்றும் எரிபொருள் ஏற்றுமதியை நிறுத்துவதற்குத் தீர்மானித்தால் மசகு எண்ணெய் ஒருபீப்பாயின் விலை 160 தொடக்கம் 200 அமெரிக்க டொலர்களாக அதிகரிக்குமென்று சர்வதேச பொருளாதாரஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மீண்டும் வழமை நிலைக்குத் திரும்புவதற்கு இன்னும் 5வருடங்கள் செல்லும்.
ரஷ்ய எரிபொருள் ஏற்றுமதிமொத்த ஏற்றுமதியில் சுமார் 8 வீதம். நாளாந்தம் இத்தொகையை ரஷ்யா ஏற்றுமதி செய்கிறது..அதாவது, மசகு எண்ணெய் 2 தசம் ஐந்து பீப்பாய்களை ஜேர்மன், இத்தாலி,நெதர்லாந்து, போலந்து, பின்லாந்து, கிறீஸ், ருமேனியா, பல்கேரியாஉள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது.
இதில் மூன்றில் ஒன்று ‘பெலருஸ்’அரசின் ஊடாக குழாய் மூலம் ஐரோப்பாவிற்கு விநியோகிக்கப்படுகின்றது.
ரஷ்யாவின் பிரதான வருமானம் மசகு எண்ணெயைச் சுத்திகரித்த எரிபொருள், எரிவாயு, நிலக்கரி முதலியவற்றினாலேயேபெறப்படுகின்றது. இவற்றில் பெரும்பாலான வகைகள் சீனாவுக்கு ஏற்றுமதிசெய்யப்படுகின்றன.இதற்கு மேலதிகமாக நெதர்லாந்து, பெலருஸ், ஜேர்மன், இத்தாலி போன்ற நாடுகளுக்கும்கூடுதலான அளவு ஏற்றுமதி செய்யப்படுகின்றது. தற்போதைய நிலைமையில் ரஷ்யாவுக்கு எதிரான தடைநடைமுறைப்படுத்தப்பட்டால் தமக்கு எந்த வழியும் இல்லை என்று ஜேர்மன் மற்றும் நெதர்லாந்துஆகிய நாடுகள் தெரிவித்துள்ளன.
மதிப்பீட்டிற்கு அமைவாக உலகமசகு எண்ணெய் உற்பத்தியில் 12 வீதத்தை ரஷ்யா உற்பத்தி செய்கின்றது. இதேபோன்று உலகஎரிவாயுத் தேவையில் சுமார் 17 வீதம் ரஷ்யாவிலிருந்து பெறப்படுகின்றது. பெரும்பாலான நாடுகள் ரஷ்யாவுக்கு எதிரான தடைகளை மேற்கொண்டால்எரிசக்தி தொடர்பில் தடைகள் ஏற்படக்கூடும் என்று அச்சத்தை இந்த நாடுகள் வெளியிட்டுள்ளன.
ஐரோப்பாவின் மசகு எண்ணெயின்தேவையில் 40 வீதமும் எரிவாயுவில் 25 வீதத்தையும் ரஷ்யாவே பூர்த்தி செய்கின்றது. இந்தஉற்பத்திகள் நிறுத்தப்பட்டால் எரிபொருளை உற்பத்தி செய்யும் ஒபெக் அமைப்பு எரிசக்தியின்கோரிக்கையை நிறைவேற்றும் போது போட்டித் தன்மை ஏற்படும். இதனால் பிரச்சினைகளும் தோன்றக்கூடும். இவ்வாறான சூழ்நிலையில் மசகுஎண்ணெய் ஒரு பீப்பாயின் விலை வேகமாக அதிகரிக்கும். இது சிறிய பொருளாதாரத்தைக் கொண்ட நாடுகளுக்கும்,கடன் சுமையால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
ரஷ்யா நாளாந்தம் 7 மில்லியன் பீப்பா மசகு எண்ணெயை சர்வதேச சந்தைக்குவழங்கி வருகின்றது. இதன் பெறுமதி தொள்ளாயிரம் மில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.
ஒபெக் அமைப்பு கருத்து வெளியிடுகையில், தமது அமைப்பு நாடுகளால் இந்த சர்வதேச தேவைக்குஏற்ப உற்பத்தியை அதிகரிக்க முடியாது என்று தெரிவித்துள்ளது.