ரஷ்யா – உக்ரைன் போர், மத்திய வங்கிகளின் வட்டி விகித உயர்வு திட்டம் ஆகியவற்றின் மூலம் பங்குச்சந்தையைப் போலவே கிரிப்போடகரன்சி சந்தையும் அதிகப்படியான சரிவையும், தடுமாற்றத்தையும் எதிர்கொண்டு வரும் நிலையில், எலான் மஸ்க்-ன் ஒரேயொரு டிவீட் மூலம் இன்றைய சரிவில் இருந்து மொத்தமாக மீண்டு உள்ளது.
கிரிப்டோகரன்சி குறித்து அவ்வப்போது முக்கியமான கருத்துகளைத் தெரிவிக்கும் எலான் மஸ்க், இன்று வெளியிட்டுள்ள டிவீட் மூலம் கிரிப்டோ முதலீட்டாளர்களுக்கு அதிகப்படியான நம்பிக்கையைக் கொடுத்துள்ளது.
டாடாவின் அதிரடி திட்டம்.. உக்ரைன் – ரஷ்யா பிரச்சனையால் திணறும் உலோகத் துறை..!
கிரிப்டோகரன்சி
திங்கட்கிழமை வர்த்தகம் துவங்கிய பின்பு முன்னணி கிரிப்டோகரன்சி அனைத்தும் 3 சதவீதம் வரையில் சரிந்து வாரத்தின் முதல் நாளே ஏமாற்றம் அளித்தது. அதேவேளையில் இன்று ஆசிய சந்தையில் உருவான தடுமாற்றத்தை எதிர்கொண்டு சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி நிலையான வர்த்தக வளர்ச்சியைப் பதிவு செய்தது.
ரீடைல் முதலீட்டாளர்கள்
இதனால் ரீடைல் முதலீட்டாளர்கள் பலர் கிரிப்டோ சந்தையில் இருக்கும் பணத்தைப் பங்குச்சந்தைக்கு மாற்றத் துவங்கினார். இந்த நிலையில் தான் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவரான எலான் மஸ்க் மிகவும் முக்கியமான டிவீட்டை பதிவிட்டு கிரிப்டோ முதலீட்டாளர்களுக்குப் புதிய நம்பிக்கையைக் கொடுத்துள்ளார்.
எலான் மஸ்க் டிவீட்
எலான் மஸ்க் இன்று வெளியிட்ட டிவீட்டில் அடுத்தச் சில ஆண்டுகளில் பணவீக்க விகிதம் பற்றி உங்கள் யூகம் என்ன? என்று டிவீட் செய்தார், இதற்கு microstrategy நிறுவனர் மைக்கேல் சைலர் கூறுகையில் அமெரிக்க டாலர் அடிப்படையிலான நுகர்வோர் பணவீக்கம் வரலாற்று உச்சத்தைத் தொடும்.
வலிமையற்ற நாணயங்கள்
இதன் மூலம் வலிமையற்ற நாணயங்கள் வீழ்ச்சி அடையும், கடன் மற்றும் மதிப்புப் பங்குகளில் இருக்கும் பணம் பெரும் பகுதி பிட்காயின் போன்ற அரிதான சொத்துக்கான மூலதனத்தின் குவியும் எனக் கூறினார்.
நிலையான சொத்துக்கள்
பொதுவான நிதியியல் கொள்கையின் படி, பணவீக்கம் அதிகமாக இருக்கும் போது டாலர்களை விட, வீடு அல்லது நல்ல பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனப் பங்கு போன்றவற்றில் முதலீடு செய்து கைப்பற்றுவது சரியானதாக இருக்கும். இதேவேளையில் என்னிடம் இருக்கும் பிட்காயின், எதிரியம் அல்லது டோஜ் காயின்களைக் கட்டாயம் விற்பனை செய்ய மாட்டேன் என டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
பிட்காயின் விலை
எலான் மஸ்க் டிவீட் செய்த பின்பு 37728 டாலரில் இருந்த பிட்காயின் மதிப்புத் தற்போது 39,0654.19 டாலராக உயர்ந்துள்ளது. இதேபோல் எதிரியம் 2,503 டாலரில் இருந்து 2,589.25 டாலர் வரையில் உயர்ந்துள்ளது. மேலும் டோஜ் காயின் விலை 0.1104 டாலரில் இருந்து 0.119 டாலர் வரையில் உயர்ந்துள்ளது.
Elon Musk tweets he won’t sell any Bitcoin, Ether and Dogecoin and advises investors
Elon Musk tweets he won’t sell any Bitcoin, Ether and Dogecoin and advises investors எலான் மஸ்க் போட்ட ஒரேயொரு டிவீட்.. பிட்காயின், எதிரியம் விலை உயர்வு..!