"பாலியல் ரீதியான பிரச்னைகளை நானும் சந்திச்சிருக்கேன்!" – `எதற்கும் துணிந்தவன்' திவ்யா

சூர்யாவின் நடிப்பில் சமீபத்தில் வெளியாகிருக்கும் திரைப்படம் ‘எதற்கும் துணிந்தவன்’. இந்தப் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார், திவ்யா துரைசாமி. நியூஸ் ஆங்கராக தன் பயணத்தைத் தொடங்கியவர் என்பது குறிப்பிடத்தகக்து. அவரின் திரைப்பட அனுபவங்கள் குறித்து நம்மிடையே பேசினார்…

திவ்யா

“சூர்யா சாரை ஒரு ரசிகையா காலேஜ் படிக்கும்போது பார்த்திருக்கேன். பின்னாளில், ஆங்கராக அவரை சந்திச்சிருக்கேன். இப்ப அவர் கூடவே சேர்ந்து நடிக்க வாய்ப்பு கிடைச்சது உண்மையிலேயே சந்தோஷமா இருக்கு. ஷூட் ரொம்ப ஜாலியா இருந்துச்சு. உண்மையான செங்கல் சூளையில் சண்டைக்காட்சி ஷூட் பண்ணாங்க. அந்த சீன் ரொம்பவே கஷ்டப்பட்டு நடிச்சேன். வேற லெவல் அடி எல்லாம் வாங்கினேன். அந்த ஷாட் எடுக்கும்போது கடைசி நாள் எனக்கு காய்ச்சலே வந்துடுச்சு. அந்த அளவுக்கு அங்கே வெயில் கடுமையா இருந்துச்சு. அந்த சூழலில்தான் அந்த சீனை எடுத்தோம்.

கண்டிப்பா இப்படி முக்கியமான கதாபாத்திரத்தில் என்னை நடிக்க வச்சதுக்கு பாண்டிராஜ் சாருக்கு என் நன்றியை சொல்லியே ஆகணும். எல்லாரும் இது பொள்ளாச்சி சம்பவத்தை அடிப்படையா கொண்ட கதைன்னு சொல்றாங்க. ஆனா, உண்மையில் அப்படியில்லை. எல்லா பெண்களும் ஏதோ ஒரு வகையில் சந்திக்கும் பாலியல் ரீதியான பிரச்னைகளை பெண்கள் சார்பா எடுத்து சொல்ற படம் தான் இது! பாலியல் ரீதியான பிரச்னைகளை நானும் சந்திச்சிருக்கேன். ஆனா, அதை தைரியமா கடந்தும் வந்திருக்கேன்.

திவ்யா

யாரெல்லாம் நமக்கு நடக்குற அத்துமீறல்களை வாய்விட்டு சொல்லாம இருக்காங்களோ அவங்க மீதுதான் மேலும், மேலும் அத்துமீறல்கள் நடக்குது. சூர்யா சார் மிகச்சிறந்த மனிதர். அவர் பிரஸ்மீட்ல என்னை பற்றி பேசுவார்னு நான் கொஞ்சமும் எதிர்பார்க்கலை. அவர் ரியல் ஹீரோ. திரைக்கு பின்னாடி அத்தனை நல்ல விஷயங்கள் பண்றாங்க. சமூகத்தில் என்ன பிரச்னை வந்தாலும் முதல் ஆளா குரல் கொடுக்கிறது அவராகத்தான் இருக்கும். அவர் என்னைக் குறிப்பிட்டு சொன்னதைவிட பெருசா எனக்கு என்ன வேணும்? அதுவே எனக்கு போதும்!

செட்ல சீனியர் ஆர்ட்டிஸ்ட் பலர் இருந்தாங்க. சத்யராஜ் சாரெல்லாம் அத்தனை கதை சொல்லுவார். நான் கலகலன்னு பேசுற பொண்ணு. ஆனா, செட்ல ரொம்ப அமைதியா இருந்தேன். எல்லாரும் சொல்ற கதைகளைக் கேட்டேன். அது மிகச்சிறந்த தருணம்!

திவ்யா

இதுதவிர, பல விஷயங்கள் குறித்து திவ்யா நம்மிடம் பேசினார். அந்த வீடியோவை காண லிங்க்கை கிளிக் செய்யவும்!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.